இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, மலேசியா நாட்டின் கோ ஜே பெய் மற்றும் நூர் இஜுதீன் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 21-19, 21-19 என்ற செட் கணக்கில் போராடி இந்திய இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.