• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓட்டு போடாத பெண்ணை செருப்பால் தாக்கிய அதிமுக நிர்வாகி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவகன் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா தேவி. இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் செல்வராஜ்.
இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வட்டச் செயலாளராக உள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செல்வராஜின் மனைவி வசந்தராணி அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் சித்ரா தேவியின் வீட்டிற்குச் சென்ற செல்வராஜ் ‘எனது மனைவிக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை’ என கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர், கடந்த 24ம் தேதி கொல்லைக்குச் சென்ற கொண்டிருந்த சித்ரா தேவியை வழிமறித்த அவர், “ஏன் எங்கள் கொல்லை பாதை வழியாகச் செல்கிறாய்” எனக் கூறி அவரை செருப்பால் அடித்துள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சித்ரா தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.