• Thu. Dec 12th, 2024

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே .பி.பி .பாஸ்கர் வீட்டில் சோதனை

ByA.Tamilselvan

Aug 12, 2022

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் 24 ,மதுரை,திருப்பூரில் தலா ஒரு இடம் என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.கே .பி.பி .பாஸ்கர் மற்றும் உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.