• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் அதிமுக அமைப்பு தேர்தல்

Byதரணி

Apr 17, 2022

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் முன்னாள் அமைச்சர்கள் விருப்ப மனு வாங்கினர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர்கள் விருப்ப மனு வாங்கினர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மாநகர, ஒன்றிய, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக, நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு , மேற்கு, வடக்கு ஒன்றியங்கள், சிவகாசி கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், ராஜபாளையம் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், வத்திராயிருப்பு வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் உட்பட 13 ஒன்றியங்களுக்கும் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 நகர் பகுதிகளுக்கும் செட்டியார்பட்டி, சேத்தூர், சுந்தரபாண்டியம், கொடிக்குளம், வத்திராயிருப்பு, டபுள்யோ புதுப்பட்டி, மம்சாபுரம் ஆகிய ஏழு பேரூராட்சிகளுக்கும் சிவகாசி மாநகராட்சியில் சிவகாசி, கிழக்கு, மேற்கு, திருத்தங்கல் கிழக்கு, மேற்கு ஆகிய 4 பகுதிகளுக்கும் கழக அமைப்பு தேர்தல் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில் தேர்தல் பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விருப்ப மனுவாங்கினர். முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் டி.ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், திருவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிபரபாமுத்தையா உட்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.