விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் இளம்தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை,பாக பூத் கமிட்டி செயலாளர்கள் பணிகளை விரைந்து சரிபார்த்து தலைமை கழகத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அருப்புக் கோட்டையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் . கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்
.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், சுப்பிரமணியன், மணிமேகலை. தலைமை கழக நிர்வாகிகள், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர கழகச் செயலாளர்கள் , பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டனர்.