• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மதுரை தொகுதிக்கு என தனி ஆம்புலன்ஸ்-அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்குறுதி..,

ByKalamegam Viswanathan

Mar 28, 2026

மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

234 தொகுதியிலும் எடப்பாடி யார் சொன்னதை போல 200 தொகுதிகளை வென்றெடுப்போம். பொதுவாக மக்கள் கடந்த ஆட்சியை ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

திமுக கடந்த தேர்தலில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து 12 சதவீதம் தான் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பொதுச்செயலாளர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை கொடுத்தாலே நாங்கள் வென்று விடுவோம். திமுக தோல்விகளை பார்ப்போம். திமுக கொண்டு வந்த நூலகம் கட்டி ஆறு மாதத்திலேயே கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. ஊருக்கு வெளியில் வணிக நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி வைத்துள்ளார்கள்.

இரண்டு பேருக்கு தான் போட்டி திமுகவை, அதிமுகவா. திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்தவர்கள் ஆனால் அவர்கள் ஒரு ஆணியும் புடுங்க வில்லை எனவே இந்த முறை அதிமுகவிற்கு வாய்ப்பளிப்பார்கள்.

வடக்கு தொகுதிக்கு புதிய திட்டங்கள் வைத்திருக்கிறேன் வடக்கு தொகுதிக்கு என தனி ஆம்புலன்ஸ் மற்றவைகளை இப்பவே சொல்லிவிட்டால் எதிர்க்கட்சிகள் காப்பி அடித்து விடுவார்கள்.

வெற்றி தோல்வியை கடந்து சேவையில் இருந்திருக்கிறேன் இந்த முறை சேவையுடன் வெற்றியும் இருக்கும்.