

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சியில் போட்டியிடக் கூடிய பிரதான கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் வாக்காளர்களை கவரும் வண்ணம் நூதன முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் 32வது வார்டுக்கு போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளரும் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சுகந்தி அசோக் பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து உள்ள திமுக அரசு, முதன்முதலில் தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் தரமற்ற பொங்கல் தொகுப்பை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
வாழவந்தான் நாடார் தெரு, பி.டி.ஆர்.மெயின் ரோடு, தாமஸ் தெரு, சோணையார் கோவில் தெரு, செக்கடித்தெரு, ஒளவையார் தெரு, எல்.டி.சி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏழை எளிய மக்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் முழுநீள கரும்பையும் வழங்கியது அதிமுக அரசு. ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு பொய் வாக்குறுதிகளை மட்டுமே 24 மணி நேரமும் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள திமுக அரசு. தமிழுக்கும் தமிழர் நலனுக்கும் தமிழர்களுக்காகவும் நாங்கள் பாடுபடுவோம் அதற்கான அரசுதான் திமுக அரசு என்று கூறிவிட்டு,பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அவர்கள் வழங்கிய ஏராளமான பொருட்கள் இருந்ததாக தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. பயன்படுத்த முடியாத வெல்லம் தரமற்ற பருப்புவகைகள் குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டபொருட்கள் இப்படி ஏராளமான சர்ச்சைகள் உடன் பொங்கல் தொகுப்பை வழங்கியது திமுக அரசு. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் மக்களுக்கான திட்டம் என்று சொல்லிவிட்டு தரமற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தாத பொருட்களை வழங்கிய இந்த திமுக அரசை வேரோடு அறுக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுத்து மக்களுக்காக பாடுபடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாநகராட்சியில் அதிமுகவின் கோட்டை என்கின்ற வகையில் மீண்டும் இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்து உங்களது பொன்னான வாக்குகளை தாருங்கள் என்று நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார்.
குறிப்பாக பொங்கல் என்றால் அனைவரின் நாவிலும் உமிழ் நீர் சுரக்க தொடங்குவது போல், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வார்டு மக்கள் தேர்தல் என்றவுடன் திமுக அரசு மக்களை பொய் வாக்குறுதி கூறி ஏமாற்றிய செயல் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூதன பிரச்சாரம் என்று தெரிவித்தார் வேட்பாளர் சுகந்தி அசோக்.