விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் முன்னிலை வகித்தார், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.