
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் மாத கார்த்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர் ,பஞ்சாமிர்தம், திரவிய பொடி ,சந்தனம் ,திருநீறு, உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை, நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் குழந்தை வரம் வேண்டியும், கடன் பிரச்சனை தீரவும், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் நன்கு செழிக்கவும் ,சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனத்தில் கலந்து கொண்டனர்.
