அகஸ்தீஸ்வரம் தோவாளை விளவங்கோடு கல்குளம் என்ற நான்கு தாலுக்காளை
கொண்ட பகுதிகளாக இருந்தன.
கடந்த 2024_ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 30_ம் நாள் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை அமைத்து.25_ம் ஆண்டின் விழாவை கொண்டாட்டத்துடன்.

கடலில் ஐய்யன் திருவள்ளுவர் சிலை_ சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ஆன கடற்பரப்பில். தமிழக அரசின் ரூ.38_கோடி செலவில் கட்டப்பட்ட
‘கண்ணாடி’ பாலத்தை திறந்து வைத்தார். அதே விழாவில் முதல்வர்.ஸ்டாலின்.
கன்னியாகுமரியை நகராட்சி என தரம் உயர்த்தும் அறிவிப்பை விழா மேடையில் அறிவித்தார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி நிறைவடைய சில மாதங்களே இருந்த போது. அன்றைய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அகஸ்தீஸ்வரம் தாலுகாவை நிர்வாகம் வசதிக்காக இரண்டாகப் பிரிந்து பிரிக்கும் பகுதி வேறு ஒரு பெயரில் அழைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வந்ததும்.
அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில். அ.தி.மு. க. அரசின் அறிவிப்பு என்ற நிலையில் நின்று போனது.
கன்னியாகுமரி நகராட்சி பகுதி விரிவடையவிருக்கும் நிலையில். அகஸ்தீஸ்வரம் தாலுகா. நிர்வாகத்தின் வசதிக்காக அகஸ்தீஸ்வரம் தாலுகா பிரிக்கும்
அரசின் நடவடிக்கை எதுவும் இல்லாத நிலையில். அண்மையில் ஒரு சாரார் உணவு பாதுகாப்பு குழுமத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜாவிடம்
கொடுத்த ஒரு மனுவில்.
அகஸ்தீஸ்வரம் தாலுகா நிர்வாக வசதிக்காக பிரிக்கும் போது.அந்த பெயர் மாற்றத்தில் அகஸ்தீஸ்வரம் என்ற அடையாள பெயர் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை. செய்தி தாள்களில் செய்தியாக வந்துள்ளதை பார்த்த,வாசித்து தெரிந்துகொண்ட.
அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.
அதிமுக ஆட்சியின் நிறைவு நாட்களில் அன்றைய முதல்வரது அறிக்கையாக. அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியை நிர்வாகம் வசதிக்காக இரண்டாகப் பிரிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக செய்தி வந்த நிலையில் அதனை ஏற்காது கருத்துக்கள் வெளியே வந்த நிலையில் அன்றைய அ.தி.மு.க. அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போடப்பட்டது.

இப்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜாவிடம் இப்படியான ஒரு மனு கொடுத்துள்ள நிலையில். எனது கருத்தை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சி காலத்தில் அகஸ்தீஸ்வரம் என்ற சட்டமன்ற தொகுதியே இருந்தது. அகஸ்தீஸ்வரம் என்ற அடையாள சொல் எங்களது வரலாற்று பெருமை மிகுந்த அடையாளம். இன்றைய அரசு அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியை சேர்ந்த மக்களின் மன உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் எங்களின் பெருமைமிக்க அடையாளம் சொல்லான அகஸ்தீஸ்வரம் என்ற பெயர் இல்லாமல் எந்த பெயர் மாற்றமும் செய்வதில் எங்களுக்கு உடன் பாடில்லை என்பதை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
அகஸ்தீஸ்வரம் என்ற பெயர் சொல் எங்களது வரலாற்று பதிவு. இந்த பகுதியின் பெருமை மிகுந்த அடையா சொல் என்பதை தமிழக அரசின் பார்வைக்கு வைத்துள்ளோம் என தெரிவித்தார்.அய்யாவழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார்.




