• Thu. Apr 25th, 2024

ரஷ்ய சந்தையிலிருந்து விடைபெறும் ஸ்பாட்டிஃபை நிறுவனம்..!

Byகாயத்ரி

Mar 26, 2022

ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ், நெட்பிளிக்ஸ், கோகோ கோலா, பெப்சி, KFC, பீட்சா ஹட், டிஸ்னி, சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறும் பட்டியலில் ஸ்பாட்டிஃபை நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சமூக ஊடகங்கள் வரிசையில் தற்போது ஸ்பாட்டிஃபையும் இணைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *