• Fri. Jun 9th, 2023

அண்ணாமலைக்கு கூடுதல் பொறுப்பு; பாஜக தலைமை அறிவிப்பு

ByA.Tamilselvan

Apr 18, 2023

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தலைமையிலிருந்து கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கர்நாடக மாநில பாஜக மேலிட இணைப் பொறுப்பாளராகத் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் 86 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளார்.இதில் 30 தொகுதிகளில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதும் அம்மாநில அரசியல் குறித்து அண்ணாமலை அறிந்து வைத்திருப்பார் என்பதாலும் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *