• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலினை அண்ணா என்று அழைத்த நடிகை ஷோபனா…

Byகாயத்ரி

Mar 30, 2022

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஹயாத் மஹாலில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய திரைப்பட நடிகை ஷோபனா, “கலை சம்பந்தமாக நான் ஆவணப்படம் ஒன்றை எடுக்க ஆசைப்பட்டேன்.

இரண்டு வருடங்களாக அதற்காக நான் கஷ்டப்பட்டேன். சினமா திரைப்படம் கோயில்களில் எடுக்க அனுமதி இல்லை. இருப்பினும் ஆவணப்படம் எடுப்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் நான் சினிமா துறையில் உள்ளதால் கடந்த ஆட்சியில் எனக்கு ஆவணப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. தற்போது இந்த அரசு ஆட்சி மாறி வந்த பிறகு எனக்கு அந்த அனுமதி ஒரே மாதத்தில் கிடைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முதல்வரை சந்திப்பதற்காக நான் சென்ற போது அவரை எவ்வாறு அழைப்பது ? என்று குழப்பத்தில் இருந்தேன். அப்போது ஒரு சிலர் ‘தளபதி’ என்று அழைக்குமாறு யோசனை கூறினார்கள். அதேபோல் வேறு சிலர் ‘தலைவர்’ என்று அழைக்குமாறு கூறினார்கள். ஆனால் அவரை நான் அண்ணா என்றே அழைத்தேன்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.