• Tue. Dec 10th, 2024

முதன்முதலில் தன் மகளின் முகத்தை காட்டிய நடிகை பிரணிதா…

Byகாயத்ரி

Aug 3, 2022

தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா. இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதைப்பார்த்த திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியவில்லை. இந்த நிலையில் தனது குழந்தையின் முகம் தெரியும்படி எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் பதிவிட்டுள்ளார் பிரணிதா. மேலும் மகளுக்கு ஆர்னா என பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, உங்களின் மகள் ரொம்ப க்யூட்டாக இருக்கின்றார். அப்படியே உங்களை போல இருக்கின்றார். வாழ்த்துக்கள் என கூறிவருகின்றனர்.