அதிகமான லைக்ஸ்களைப் பெறுவதற்காக நடிகை பூனம்பஜ்வா கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.
சுந்தர் சியுடன் இவர் இணைந்து நடித்திருந்த முத்தின கத்திரிக்கா, அரண்மனை 2 ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
மாடலிங் மூலமே சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றார் நடிகை பூனம் பஜ்வா. முதலில் தெலுங்கில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது அதிகப்படியான கவர்ச்சி ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறது.
ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர் சியுடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் பூனம் பஜ்வா நடித்துள்ளார். குப்பத்து ராஜா என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார் பூனம் பாஜ்வா.
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இவர் வெளியிட்டுவரும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை வேறு லெவலில் கவர்ந்து வருகிறது. படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து இத்தகைய கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். பிகினியிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக சோம்பல் முறிக்கும்வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் அதிகமான லைக்ஸ்களை அள்ளியது. இதனிடையே தற்போது இன்னருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மேலும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இவரது இந்தப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அதை ரசிக்கவே செய்கின்றனர். ஆனாலும் அதிகமான கவர்ச்சி ஒருசிலரை முகம் சுளிக்க வைக்கிறது. அதை அவர்கள் கமெண்டிலும் கூறி வருகின்றனர். ஏன் இப்படி அதீதமான கவர்ச்சி காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நடிகை பூனம்பஜ்வா..!




