


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.தான் கர்பமாக இருப்பதாக நமிதா சில மாதங்களுக்கு முன் போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட்டார். அவரது pregnancy போட்டோஷூட் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் நேற்று நமிதாவுக்கு பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது என அறிவித்து இருக்கிறார். தொடர்ந்து கோவிலுக்கு கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள் உடன் சென்று வழிபட்டு இருக்கிறார். அதன் பின் அவர் இந்த அறிவிப்பை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

