

பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை விவகாரத்து செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் நடிகை எமி ஜாக்சன், விஜய்யின் ‘தெறி’, தனுஷூடன் ‘தங்கமகன்’, விக்ரமுடன் ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதற்கிடையே நடிகை எமி ஜாக்சன், பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் பனயோட்டோ என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.இருவரும் நட்சத்திரங்களாக ஜொலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் பிரியவுள்ளதாக தகவல் வெளியானது. பிரிட்டன் நடிகர் எட் வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளதாகவும் ஹாலிவுட்டில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அதேநேரம் விரைவில் ஜார்ஜ் பனயோட்டோவை விவகாரத்து செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து நட்சத்திர ஜோடிகள் பிரிவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
