• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கி பயிற்சியில் நடிகர் யஷ்.. வைரல் வீடியோ..

ByA.Tamilselvan

Sep 30, 2022

கே.ஜிஎப் படபுகழ் நடிகர் யஷ் தனது அடுத்த படத்திற்கான துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது. யஷ் சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது. இதையடுத்து வரலாற்று பாணியில் உருவாகவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.