• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திரும்பவும் காதலில் விழுந்த நடிகர் விஷால்…அவரே சொல்லிட்டாரு..!!

Byகாயத்ரி

Jul 7, 2022

நடிகர் விஷாலுக்கு வயது 40-ஐ கடந்தவிட்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர்.

அதன்பின் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த விஷால், திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பளிச் பதிலை கூறி உள்ளார். அப்பா, அம்மா பாக்குற பொண்ணு எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யார்னு சொல்றேன்” என கூறி உள்ளார்.யாரா இருக்கும்..?? யோசனையில் ரசிகர்கள்…