• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்

Byவிஷா

May 10, 2024

தமிழகத்தில் 2024 கல்வியாண்டில் வெற்றி பெற்றுள்ள 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.