• Thu. May 9th, 2024

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி…

Byஜெ.துரை

Dec 22, 2023

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி, இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து, நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம்.

ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்தவர் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதை களங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனை கூட்டுவதாக அமைந்துள்ளது.

தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக் கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி. அவருக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் வெற்றி, தன் படங்கள் போலவே தன் பிறந்தநாளையும் தனித்துவமாக கொண்டாடியுள்ளார்.

தான் வசிக்கும் சின்மயா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர், அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கு எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ரசிகர்கள் நடிகர் வெற்றிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவரின் இனிமையான குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் புதுமையான படங்களைத் தந்து அசத்தி வரும் நடிகர் வெற்றி தற்போது, இரவு, ஆலன், ஈரப்பதம் காற்று மழை முதலான படங்களில் நடித்து வருகிறார்.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *