• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

Byadmin

Jul 27, 2023

நடிகர் சூரியின் சொந்த கிராமமான இராஜாக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர்.
மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடம் ஆடி மாதத்தில் கோவில் திருவிழா கோயில் ஊருக்குள் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கிராமம் பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம். அதேபோல் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வார். அதே போன்று இந்த ஆண்டும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் முன்னணி பிரபல திரைப்பட நடிகர் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நடிகர் சூரி வீட்டுக்கு சென்று முன்னதாக பொதுமக்களுக்கு அவர் கைகுலுக்கி கையில் முத்தமிட்டார். இதனால் நடிகர் சூரி வீட்டிற்கு முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர் அதேபோல் விஜய் டிவி புகழ் பெற்ற புகழ் மற்றும் வணிகவரி துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடிகர் சூரியுடன் சேர்ந்து சாப்பிட்டார் இதில் திமுக முக்கியமான நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.