கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் 7 மணி அளவில் திரையிடப்படுகிறது. அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்தை காண திரையரங்கில் குவிந்துள்ளனர் பிராட்வே சினிமாஸில் காலை 7 மணிக்கும், பிற திரையரங்குகளில் ஒன்பது மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 68 வது படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கின்றார். பிராட்வே திரையரங்கில் காலை 3 திரைகளில் படம் திரையிடப்படுகின்றது.
இயல்வது கரவேல்…: கோட் திரைப்படத்தை கண ரசிகர்கள் காலை 6 மணி முதல் உற்சாகத்துடன் திரையரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் குடும்பத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்திற்கு வந்து கொண்டிருக்கிறனர்.
அரசியல் கட்சி துவங்கப்பட்ட பின்னர் வரக்கூடிய படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தகவல் திரைப்படத்தைக் காண திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்து வந்தார்.