• Thu. Sep 19th, 2024

சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024!

Byஜெ.துரை

Sep 5, 2024

வீ எண்டர் டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது.

இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த், டாக்டர் சந்தீப் ஆனந்த் விழாவை துவங்கி வைத்தார்கள்.

242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இயக்குனர் தரணி ராஜேந்திரன், கலை இயக்குனர் மூர்த்தி, எடிட்டர் செல்வா, நடிகர் அன்புடன்அர்ஜூன் , கலந்துகொண்டனர்.

நிகழ்வில் சிறந்த குரும்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. வீ எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் விஜய், சபரிநாதன் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *