• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்

ByA.Tamilselvan

Apr 21, 2023

கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம் சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் தனது 93வது வயதில் இன்று காலை காலமானார்.
பாத்திமா இஸ்மாயில், வயது முதிர்வு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகினர் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு திரையுலகினரும் நடிகர் மம்முட்டிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.