• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் மாதவன்…

Byகாயத்ரி

Jul 5, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பலரின் பாராட்டுகள் பெற்று வருகிறது. இந்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சமூக வலைதளத்தில் நெகழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.

அதில், ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுப்பட்ட பத்ம பூஷன் திரு.நம்பி நாராயணன் அவர்கள் வரலாற்றை தத்ரூபமாக நடித்து படமாகி இயக்குனராக தனது முதல் படத்தில் தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார். இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று ரஜினி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாதவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய படகுழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி என்று தெரிவித்துள்ளார்.