• Sun. Nov 3rd, 2024

பாலியல் வழக்கில் தப்பிக்கஏழுமலையானை நம்பும் நடிகர் திலிப்

மலையாள நடிகரான திலீப் மீது பிரபல நடிகை பாவனாவை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு என இரண்டு கிரிமினல் வழக்குகள் நடந்து வருகிறது. திலீப்புக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். விரைவில் நடிகை கடத்தல் வழக்கு முடிவடைய இருக்கிறது. இதில் திலீப்புக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறிவருகின்றனர்இந்த நிலையில் நடிகர் திலீப் திடீரென்று நேற்று சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்முதல்நாள் இரவே சபரிமலைக்கு வந்து தங்கியிருந்த அவர் ஏப்ரல் 17 அன்று அதிகாலை சன்னிதானத்தில் வழிபாடு நடத்தினார்அப்போது அவர் விரதம் இருந்தவர்கள் அணியும் ஆடையும், மாலையும் அணிந்திருந்தார். அவரது பெயரில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அவருடன் அவரது உதவியாளரும், மானேஜரும் மட்டுமே உடன் வந்திருந்தனர்.இரண்டு குற்ற வழக்கிலிருந்தும் தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும். தனது கலை பயணமும், வாழ்க்கை பயணமும் எந்தவித இடையூறுமின்றி நடக்க வேண்டும் என்று அவர் ஏழுமலையானிடம்வேண்டுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *