• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!

Byஜெ.துரை

Nov 20, 2024

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்! நடிகர் அருண் விஜய் அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

அதன்பின் நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது……

அனைவருக்கும் வணக்கம் , என்னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்கள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோடு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதை பார்த்து மற்ற அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு தான் இது. இந்த முகாமை சிறப்பாக நடத்திய என் ரசிகர்களுக்கு நன்றி.

நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.