• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.., விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

Byவிஷா

Oct 18, 2023

விருதுநகர் மாவட்டத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் நாளை முதல் 24-ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.