• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒப்படைக்க நடவடிக்கை – இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் பேட்டி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் இலங்கை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை, தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்கக் கோரியும், இருதரப்பு மீனவர்களிடையே இடையே சுமுக தீர்வு ஏற்படுத்தித்தர கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட இருவரும், இலங்கை பிரதமர் மற்றும் துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு மீனவர்களும் வெளியே சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கைக்கும் இந்தியாவிற்கான நட்பு கலாச்சார ரீதியிலானது. அது என்றும் போல் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நல்ல நிலையில் உள்ள படகுகள் ஒப்படைக்க இலங்கை அரசுடன் பேசி அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதியளித்தார்.

மேலும் எதிர்காலத்தில் இலங்கை, இந்திய மீனவர்கள் சுமுகமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

 

செய்தியாளர் : பாஸ் கரவேல்