

போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள் பெயரில் 31 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது. அந்த இடத்தை விற்பதற்கு முயன்ற பொழுது அது ஒச்சமாள் என்ற வேறு ஒரு பெண்ணின் பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்த பொழுது அவர் தாய் பெயரில் இருந்த 31 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் கோசிமின் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை ஒச்சம்மாள் என்ற ஆதாரில் மாற்றி உசிலம்பட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரம் பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதே போல், ஊரில் பல பேரின் ஆதாரை மோசடியாக பயன்படுத்தி பல நூறு ஏக்கர் நிலத்தை போலிப் பாத்திரமாக பதிவு செய்துள்ளார் என குற்றம்சாட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி ஊராட்சி தலைவர் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கூறினர்.
