• Fri. Apr 18th, 2025

திமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு

ByA.Tamilselvan

May 11, 2022

தேனி தெற்கு மாவட்த்தில் நடைபெற்றதிமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
தேனி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது இதில் தொடர்ந்து உத்தமபாளையம் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது தேர்தல் அதிகாரி முறையாக தேர்தல் நடத்த வில்லை மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது
இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சியில் திமுக சார்பில் நடைபெறும் உட்கட்சித் தேர்தலில் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக கட்சியில் இருக்கும் பண்ணைபுரம் ராஜேந்திரன் என்பவர் செயலாளராக போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் விருப்ப மனு வாங்கியுள்ளார் திமுக உட்கட்சித் தேர்தலில் இவர் செயலாளராக வெற்றி பெற்று விடுவாரோ என அச்சத்தில் இவருக்கு எதிராக போட்டியிட்ட எதிர் கோஷ்டியினர் யாரோ ஒருவர் அடியாட்களை தயார் செய்து ஆசிட்டுடன் இருசக்கர வாகனத்தில் சென்று ராஜேந்திரன் பண்ணைப்புரம் பகுதியில் நடந்துகொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு உனக்கு கட்சியில் பொறுப்பு வேண்டுமா நீ செத்துப் போ என்று இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக உடம்பு முகம் முழுவதும் ஆ சீட்டில் எரிந்து துடிதுடித்த ராஜேந்திரன் என்பவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்
திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டதற்காக உயிரைக்கூட மதிக்காமல் இப்படி ஆசிட் ஊற்றி கொலை செய்யும் அளவிற்கு என்ன காரணம் ஆளும் கட்சி என்ற கோணத்தில் அமைதி காக்காமல் போலீசார் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் திமுக உட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.