பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, என்று நயினார் நாகேந்திரன் வேடிக்கையாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4 பேர் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது பெறும் பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பாக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் கூறியுள்ளதாவது தங்களுடன் 2 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். நாங்கள் கண் அசைத்தால் போதும் அவர்களிரண்டுபேரும் திமுகவில் இணைந்து விடுவார்கள் என கூறினார்.
இதற்கு பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் பதிலளித்துள்ளனர். அந்தவகையில் தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து திருநெல்வேலி எம்எல்ஏ மற்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏக்களை தூக்கி விடுவோம் என கூறிய எம்பி யார் என எனக்கு தெரியாது? பாஜக எம்எல்ஏக்களை யாராலும் தூக்கி செல்ல முடியாது. அப்படி தூக்கி செல்வதற்கு அவர்கள் என்ன கத்திரிக்காயா? வெண்டைக்காயா? என்று கேள்வி எழுப்பிய அவர் தற்போது பல முக்கிய கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்னும் பலரும் பாஜகவில் இணைவதற்கு தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.