• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘கிராமி’ விருது பெற்ற சக்தி இசைக்குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்

Byவிஷா

Feb 5, 2024

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற, 66வது கிராமி இசை விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினருக்கு கிராமி விருது கிடைத்திருப்பதால், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதை வெல்வது என்பது ஒரு கனவாகவே உள்ளது. இசைத்துறையில் மிக முக்கியமான விருதாக கிராமி விருது கருதப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 66-வது கிராமி இசை விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பத்திற்கான பிரிவில், இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது. தி மொமண்ட் என்ற ஆல்பத்திற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த இசைக்குழுவில், உஸ்தாத் ஜாகீர் உசேன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விருது பெற்ற பின் பேசிய ஷங்கர் மகாதேவன், எனது குழு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய நாட்டிற்கு நன்றி. இந்திய நாட்டை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என தெரிவித்திருந்தார். விருது பெற்ற இசைக்கலைஞர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.