• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பட்டாசு கழிவுகளில் விபத்து எதிர்பாராத விதமாக உடலில் பற்றிய தீ..,

ByK Kaliraj

Sep 21, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி ஊராட்சி எஸ். பி. எம். தெருவை சேர்ந்த மைக்கேல் ராஜ் (வயது 60 ).

இவருக்கு சொந்தமான வீடு அம்பேத்கர் காலனியில் உள்ளது. அங்கு வீட்டின் பின்புறம் தகர செட்டில் பட்டாசு கழிவுகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சாத்தூர் மற்றும் தாயின் பட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பட்டாசு கழிவுகள் வைத்திருந்த அறையில் பராமரிப்பு பணிகள் செய்து வந்துள்ளார்.

அப்போது பட்டாசு கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ பற்றியதாக கூறப்படுகிறது

இந்த விபத்தின் போது அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மைக்கேல்ராஜ் உடலில் தீ பற்றியுள்ளது. இதில் மைக்கேல் ராஜ் 80 சதவீதம் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மைக்கேல் ராஜை மீட்டு உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு காவல்துறையை புகார் அளித்தார் கிராம நிர்வாக அலுவலரின் புகாரை அடிப்படையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.