• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சபரீசனின் சகோதரரின் சோலார் நிறுவனத்திற்கு வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வேண்டி அமைச்சரிடம் மனு..,

ByK Kaliraj

Sep 21, 2026

சென்னை தலைமைச் செயலகத்தில் 21-9-2026இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களை சந்தித்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அனாதீன நிலத்தில் தற்போதைய ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சபரீசனின் சகோதரரின் சோலார் நிறுவனத்திற்குவழங்கிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் ஆவாரம்பட்டி மணவாரந்தை ஆகிய கிராமங்களில் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து மூன்று கிராம விவசாயிகளை பாதிக்கக்கூடிய தனியார் சோலார் நிறுவனம் அனாதீன நிலத்தில் சோலார் அமைப்பதை தடை செய்ய வேண்டி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி மாநில பொருளாளர் சுப்பாராஜ் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசகன் ராமர் வெங்கடேஷ் மாடசாமி ஆகியோர் அமைச்சரை சந்தித்து தனியார் நிறுவனமான முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய மருமகன் சபரீசனின் சகோதரர் நிறுவனத்தை அனாதீன நிலத்தை விட்டு அப்புறப்படுத்த மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது தமிழ் விவசாயிகள் சங்கம்.