மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை புல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ மாணவிகள் இன்று புதுக்கோட்டை சேஷாத்திரி சாலையிலிருந்து அப்துல் கலாம் நினைவு பேரணியை நடத்தினர். இதில் அப்துல் கலாம் கண்டுபிடித்த விண்வெளி பொருட்களை தன் கையால் செய்து காட்சிப்படுத்தி பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அசத்தினர்.

இன்று காலை சேஷாத்திரி சாலையில் இருந்து துவங்கிய பேரணி மாவட்ட விளையாட்டுமைதானம் வழியாக KKC கல்லூரியில் நிறைவு பெற்றது. பள்ளியின் நிர்வாக பொறுப்பாளர் ரோஸ்லின் பள்ளி முதல்வர் ஆன்ஸி புஷ்ப தாஸ், அனுசியா, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 200 மாணவ மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு பள்ளி மாணவ மாணவிகள் நிர்வாகிகள் நகர காவல் துறையினர் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
