• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கேக் கடையில் 10 நாட்கள் காலாவதியான கேக்குகள் விற்பனை -வாடிக்கையாளர் புகார்..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர் தனது மகனுடன் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிளாக் பாரஸ்ட் கிளை கேக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மௌஸ் வகை கேக் பார்சலில் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சென்று சாப்பிட்டு பார்த்தபோது சுல்தானின் மகன் கேக் புளிப்பு சுவையாக இருப்பது போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேக்கை பிரித்து பார்த்த சுல்தான் தானும் கேக்கை சாப்பிட்டவுடன் அவருக்கும் அதே போன்று சுவை தெரிய வந்த நிலையில் தயாரிப்பு தேதி குறித்து கேக் டப்பாவில் பார்த்த போது 19 ஆம் தேதி என இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேக் டப்பாவில் காலாவதியாகி 10 நாட்களுக்கு பின்பாக கேக் தன்னிடம் வழங்கப்பட்டதும் தனது மகனுக்கு கொடுக்கப்பட்டதை நினைத்து சுல்தான் பிளாக் பாரஸ்ட் கேக் கடைக்கு சென்று காலாவதியான கேக் குறித்து புகார் அளித்து பின்னர் தனது பணத்தை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் காலாவதியான கேக் வழங்கியதாக காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

இதனால் அங்கு வந்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் முதற் கட்டமாக விசாரணை நடத்திய பின்பு பிளாக் பாரஸ்ட் கேக் கடைக்கு வருகை தந்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடைக்குள் ஆய்வு மேற்கொண்டவர்

மேலும் காலாவதியான பொருட்களை வழங்கியது குறித்து விசாரணை நடத்தினர் மதுரையில் உள்ள பிரபல கேக்கடையில் காலாவதியான கேக் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சுல்தான் என்ற வாடிக்கையாளர் தான் தனது மகனுடன் வந்து கேக் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு சாப்பிட்டு பார்த்தபோது காலாவதியான நிலையில் கேக் இருப்பது தெரிய வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்து கேக் கடை பணியாளர்களிடம் தெரிவித்ததாகவும் அப்போது தெரியாமல் நடந்து விட்டதாக அவர்கள் கூறிய நிலையில் தான் எனது பணத்தை பெற்று விட்டு வந்து விட்டதாகவும்,் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.