• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரை திருநகரில் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர், பொருட்களை திருடிய இளைஞர் கைது

ByKalamegam Viswanathan

Dec 26, 2023

மதுரை அடுத்த திருநகர் ஜி எஸ் டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் (வாசன்) கண் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மருத்துவமனை முன்பக்கம் பூட்டிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது,
முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வரவேற்பு அறையில் இருந்த கம்ப்யூட்டர் யுபிஎஸ் போன்ற பொருட்கள் திருட்டு போயிருந்தது குறித்து அதிர்ச்சியடைந்த மேலாளர் அப்சல் ஹக்கீம் திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்‌.

அதோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சியில் ஒருவர் பொருட்கள் திருடி சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் அந்த மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் கொத்தனார் வேலை செய்த சுல்தான் மகன் பைசூல் என்பதும், அவர் மது போதையில் மருத்துவமனையில் திருடிசென்றதும் தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் திருடி சென்ற பொருட்களையும் மீட்டனர். .திருட்டு நடந்த 24மணி நேரத்தில் திருடனை பிடித்து பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினார்.