மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணி (வயது 31) கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார் .
இந் நிலையில் கடந்த 1ஆம் (நேற்று )தேதி இரவு குடி போதையில் வந்த மணி வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புமின்வாரிய அலுவலகம் அருகில் இருந்த பைக் மற்றும் டாட்டா ஏஸ் வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணசெய்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனம், சரக்கு வண்டிகளுக்கு தீ வைத்த கறிக்கடை மணியை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகு இணைப்பு பகுதியில் சோலை அழகுபுரம், எம். கே. புரம் ,மற்றும் ஜெய் ஹிந்திபுரம் சந்திப்பு பகுதிகள் உள்ளது.
இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் போதையில் அருகில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புகுந்து குடிபோதையில் அத்திமீறி நுழைந்து கார், பைக், ஆட்டோ சரக்கு வாகனங்களை தாக்கி கண்ணாடி உடைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் இதே பகுதியில் கார் பைக் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்து 3வது முறையாகும். மேலும் இந்த பகுதியில் அவனியாபுரம், ஜெய்ஹிந்புரம் போலீஸார் கண்காணிப்பு பணிக்காக காவல்துறையினரால் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதில் ஓரளவு குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடிகிறது.
தொடர்ந்து இப்பகுதியில் போதையில் உள்ள இளைஞர்கள் வாகனங்களை தாக்குவது சேதப்படுத்துவது போன்ற நிகழ்ச்சியில் நடைபெறுவதால் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.