நிலக்கோட்டையில் போக்குவரத்து மிகுந்த அணைப்பட்டி சாலையில், அதிவேகமாக சென்ற லாரியில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போக்குவரத்து மிகுந்த ஊராகும். நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் அதிக போக்குவரத்து உள்ளது.

இந்நிலையில், நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஒரு லாரியில், வலது பகுதியில் ஓட்டுனர் அருகே, அந்த லாரியின் கிளீனர் ஒருவர் லாரி பக்கவாட்டில் தொங்கியபடி சாகசம் செய்து கொண்டு சென்றுள்ளார்.
அதிவேகமாக சென்ற அந்த லாரியில் கிளீனர் சாகசம் செய்து உயிருக்கு ஆபத்து நிலையில் சென்று கொண்டிருந்ததை, பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். மேலும், அந்த லாரியை மடக்கிய நபர்கள் லாரியில் தொங்கியபடி சாகசம் செய்து கொண்டு பயணித்த இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.
ஓட்டுநர் அருகே இளைஞர் சாகசம் செய்து கொண்டு சென்றபோது எதிரே வாகனங்கள் வந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருந்திருக்கலாம்? எனக் கூறப்படுகிறது. தனது அருகே கிளீனர் தொங்கியபடி, சாகசம் செய்து கொண்டு ஆபத்தான நிலை வருவதை ஓட்டுனரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், லாரியில் தொங்கியபடி சென்ற இளைஞரும், லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனரும் மது போதையில் இருந்திருக்கலாம்? என, கூறப்படுகிறது. தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் மூலம், நிலக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
