• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற பெண் திடீர் மாயம்

நம்பியூர் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற பெண் திடீர் மாயம்.மோசடி கும்பல் மார்பிங் செய்து உறவினர்களுக்கு போட்டோ அனுப்பியதால் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் வயது 42 இவரது மனைவி மோகன சுந்தரி வயது 39 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்
நம்பியூர் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிற இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சியில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று தனது தனது மூத்த மகனிடம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதை எடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் மாயமான தனது மனைவி மோகனசுந்தரி மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் நம்பியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோகனசுந்தரியை தேடி வருகின்றனர். இதனால் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.