• Fri. Apr 26th, 2024

மர்ம நோயால் கவலைக்கிடமாக கிடந்த காட்டு யானை மரணம்

Byஜெபராஜ்

Nov 21, 2022

மேற்கு தொடர்ச்சி மலையில் மர்ம நோயால் கவலைக்கிடமாக கிடந்த காட்டு யானை மரணம் மாவட்ட மருத்துவ குழு தீவிர சிகிச்சை பலனளிக்வில்லை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை மர்ம நோயால் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தது. அப்போது. வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் இருந்த வனக்காவலர்கள் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வன அலுவலர் முருகன் ,ரேஞ்சர் கார்த்திகேயன், பாரஸ்ட் குமார் மற்றும் திருநெல்வேலி வனத்துறை மருத்துவர்கள் நவாஸ் கான், டாக்டர் அர்னால்டு டாக்டர் கருப்பையா, டாக்டர் ரவிச்சந்திரன் ,டாக்டர் அருண்குமார், டாக்டர் முத்துக்கிருஷ்ணன், டாக்டர் மனோகரன், ஆகிய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சை அளித்தனர் .இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் யானை சற்று தெளிவடைந்துள்ளது அதனால் யானைக்கு வாழைப்பழம் மற்றும் அதற்கு தேவையான உணவு பொருட்கள் கொடுத்துள்ளோம். இருந்த போதிலும் யானை கவலைக்கிடமாகவே உள்ளது எனக் கூறினர். ஆனால் சில மணி நேரங்களில் யானை உயிரிழந்தது. அதனால் மருத்துவ குழுவினர் யானை மர்ம நோயால் இறந்திருக்குமோ என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *