இன்றைய நவீன டிஜிடல் உலகில் அனைவரும் செல்போன்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இளம் தலை முறையினர் தபால் அலுவலகம் என்ற ஒரு அலுவலகம் இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஒரு குக்கிராமத்தில் கிளை தபால் அலுவலகம் ஒன்று இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

ஆம் விருதுநகர் மாவட்டம் பெரிய பேராளி கிராமத்தில் உள்ள கிளை தபால் அலுவலகம் தான் தற்போதும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இங்கு கிளை அலுவலக அதிகாரி ஆக உள்ள உதயா அவர்களிடம் நாம் பேசிய போது, “அரசு மற்றும் கோர்ட் சம்மந்த பட்ட தபால்கள் இங்கே வந்து கொண்டு தான் இருக்கிறது,சில சமயங்களில் கட்சி தபால்களும் வருகின்றன. இந்த அலுவலகம் காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை செயல் படுகிறது என்று கூறினார். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கிளை தபால் அலுவலகம் மூடப்பட்டதை கடந்த மாதம் நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
