• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

Byதரணி

Jun 1, 2024

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு இயக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டிய கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் பணியாற்றும் 3 பேர் படகில் சென்ற போது கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த ஐசக்அருண் படகிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.

கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி படகு இயக்கியது சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.