

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்துக்குள்ளானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நள்ளிரவில் வீடு கட்டுவதற்கான கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானது. லாரி புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி அப்பகுதிக்குள் நுழைந்த போது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாரி பத்திரமாக மீட்கப்பட்டது. முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜனவரி 3 – ஆம் தேதி, அதிகாலை 2 மணிக்கு கேரளாவின் கொச்சினில் இருந்து கோவையை நோக்கி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இங்கு நடைபெறும் தொடர் விபத்துக்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

