விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்று திறனாளி ஒருவருக்கு உதவி செய்த சார்பு ஆய்வாளர் . விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,மாற்று திறனாளியான இவர். ( கண் பார்வையற்றவர்) நேற்று திங்கள் கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது நிலங்களை மீட்டு தருமாறு மனு கொடுக்க வந்துள்ளார்.

மனு அளித்த பிறகு வெளியே வந்த அவருக்கு உதவி செய்யும் வகையில் பேருந்து நிறுத்தம் வரை ராஜசேகர் கையை பிடித்து அழைத்து வந்து உதவி செய்தார். இதை படம் பிடித்த நாம் அந்த அதிகாரி அவர்களிடம் சென்று பெயர் கேட்டதற்கு புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு சென்றார் .