முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க அவரது உதவியாளர்கள், உறவினர்கள், மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது அதிமுக முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் 2 வேறு வழக்குகளை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த நவம்பர் 17 ல் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை கடந்த 17அன்று தள்ளுபடி செய்தது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க அவரது உதவியாளர்கள், உறவினர்கள், மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.