

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் தனது நேர் பாதையில் இருந்து விலகி, பின்னோக்கி அதாவது தலைகீழ் இயக்கத்தில் மகர ராசிக்கு சென்றுள்ளார்.
சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கிய இயக்கத்தில் இருக்கும். இதற்குப் பிறகு, சுக்கிரன் நேர்கோட்டிற்கு வந்துவிடும்.
டிசம்பர் 19ம் தேதி சனியின் ராசிக்குள் நுழைந்துள்ள சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கி இருப்பார். இது தவிர மீன ராசியில் சுக்கிரன் வலுப்பெற்றிருக்கிறார். மறுபுறம், சுக்கிரன் வலுவிழந்து, கன்னி ராசியில் பலவீனமாக இருக்கிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும் சுக்கிரன் தலைகீழ் சஞ்சாரத்தின் சுப பலன்களை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மகர ராசியில் சுக்கிரனின் தலைகீழ் சஞ்சாரம் சாதகமாக அமையும். சுக்கிரனின் இந்த மாற்றம் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பை அதிகரிக்கலாம்.
கடனாக கொடுத்த பணமும் திரும்ப வழங்கப்படும். இது தவிர மீன ராசியினருக்கு சுக்கிரன் மாற்றம் சிறப்பாக இருக்கும். மீன ராசியினருக்கு பண வரவு அதிகரிக்கும்.
சுக்கிரனின் தலைகீழ் சஞ்சாரம் யாருக்கு அசுபமானது?
சுக்கிரனின் தலைகீழ் இயக்கம் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்வலைகளை உண்டாக்கும். சுக்கிரனின் பின்னோக்கிய சஞ்சாரம் மிதுனத்தின் எட்டாம் வீட்டில் நடந்துள்ளது. இதனால் மிது ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஏற்படும். அதேபோல் கடக ராசிக்காரர்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம். சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.
