விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (40). இவரது மகள் கவிதா (17). இவர், பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. கவிதா, பிளஸ் 2 தேர்வில் 419 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று கவிதாவும் அவரது தங்கையும் உறவினரின் வீட்டிற்குச் சென்று, கல்லூரியில் சேர்வது குறித்து விவரம் கேட்டு வருவதாக கூறிச் சென்றனர். உறவினர் வீட்டில் தங்கையை இருக்கச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து கவிதாவின் தங்கை பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கவிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அய்யனார், மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.